வைரலாகும் ரம்யா பாண்டியன் தங்கையின் போட்டோஷூட்!

  • IndiaGlitz, [Saturday,April 03 2021]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான ரம்யா பாண்டியனின் சகோதரி கீர்த்தி பாண்டியன் என்பதும் அவர் சமீபத்தில் நடித்து வெளிவந்த ’அன்பிற்கினியாள்’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கீர்த்தி பாண்டியன் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார் என்பதும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவருக்கு லட்சக்கணக்கில் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் பதிவு செய்யும் ஒவ்வொரு புகைப்படங்களுக்கும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் கீர்த்தி பாண்டியன் எடுத்த போட்டோஷூட்டின் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்கள் தற்போது மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகின்றன. ’அன்பிற்கினியாள்’ படத்தில் குடும்ப பாங்காக நடித்திருந்த கீர்த்தி பாண்டியனா இவ்வளவு கிளாமராக போஸ் கொடுத்துள்ளார்? என ரசிகர்கள் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.