சோகக் கதையைக் கூட சிரித்துக்கொண்டே கூறிய ரம்யா பாண்டியன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் சிரித்த முகத்தோடு இருக்கும் ஒரே போட்டியாளர் ரம்யா பாண்டியன் தான் என்பது அவரது ஆர்மியினர்களின் கருத்தாக உள்ளது. அதற்கு சான்றாக நேற்று அவர் தனது சோகக் கதையைக் கூறும் போது கூட சிரித்துக் கொண்டேதான் கூறினார்
தனது அப்பாவுக்கு பாம்பு கடித்து, அவருடைய உடல் நிலை மோசமாகிக் கொண்டே வந்தது என்றும் அவரது உடலின் ஒவ்வொரு பகுதியாக மோசமாகி ஒரு கட்டத்தில் அவர் இறந்து போனார் என்றும் ரம்யா கூறியபோது கூட அவர் சோகத்தை வெளிக்காட்டவில்லை
அதே போல் தான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது என்றும், சத்யம் தியேட்டரின் வாசலில் பாம்ப்ளட் கொடுக்கும் வேலைக்கு 2500 ரூபாய்க்கு சேர்ந்ததாகவும் அந்த பணம் அப்போது தனக்கு பெரிதாக இருந்தது என்றும் ரம்யா கூறினார்.
மேலும் தனது சகோதரி காஸ்ட்யூம் டிசைனராக இருந்ததால் அவருக்கு உதவி செய்வதற்காக ஒருமுறை சென்றபோது, தன்னை ஒரு இயக்குனர் பார்த்து உனக்கு போட்டோஜனிக் ஃபேஸ் இருக்கு, நடிப்பீர்களா என்று கேட்டபோது தனது வீட்டில் ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும் நான் அடம்பிடித்து நடிக்கப் போவதாக முடிவெடுத்ததாகவும் கூறினார்
ஜோக்கர் படம் தேசிய விருது பெற்று பெரும் புகழை பெற்றாலும் அந்த படத்தால் தனக்கு எந்தவித லாபமும் இல்லை என்றும், தன்னுடைய வாழ்க்கையை திசை திருப்பியது ஒரே ஒரு போட்டோ தான் என்றும், அது ஏன் வைரலானது என்றே எனக்கு தெரியவில்லை என்றும் தனது இடுப்பு போட்டோஷூட்டை காமெடியாக கூறினார்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்ற போட்டியாளர்கள் சின்ன கஷ்டத்தை கூட பில்டப் செய்து கூறியபோது தனது சொந்த கதையை கொஞ்சம் கூட சோகம் இல்லாமல் சிரித்த முகத்துடன் கூறியதால் தான் என்னவோ அவர் எவிக்சன் பட்டியலில் இருக்கின்றாரோ என்று எண்ண தோன்றுகிறது
RP's Sweet and Matured Speech????
— ʟᵒˢˡⁱʸᵃᶠᵃⁿ??Priya?? (@itsme_Riya1118) October 10, 2020
SweetHeart #RamyaPandian ????
??????????RP??????????@iamramyapandian ??@ramyapandiarmyy @banu_pavitra @Ajay__Editz @sharaofficial19 @PuvanFox @arunjeba pic.twitter.com/HYSzbPGcyO
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout