கும்மியடி கும்மியடி.. வருங்கால கணவரை கட்டிப்பிடித்து ரொமான்ஸ்.. ரம்யா பாண்டியன் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை ரம்யா பாண்டியன் திருமணம் குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், வருங்கால கணவருடன் அவர் கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான ரம்யா பாண்டியன், யோகா மாஸ்டர் தவான் என்பவரை திருமணம் செய்யப் போவதாகவும், ரிஷிகேஷில் நவம்பர் 8ஆம் தேதி திருமணம், சென்னையில் நவம்பர் 15ஆம் தேதி வரவேற்பு நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
பெங்களூரில் உள்ள யோகா பயிற்சி மையத்தில் ரம்யா பாண்டியன் பயிற்சியில் இருந்தபோது, அதே பயிற்சி மையத்தில் யோகா டீச்சராக இருந்த தவானுக்கும் அவருக்கும் காதல் ஏற்பட்டது. இதையடுத்து பெரியவர்கள் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சற்றுமுன் ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருங்கால கணவருடன் இணைந்து எடுத்த பிரீ-வெட்டிங் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் தனது வருங்கால கணவருடன் ரொமான்ஸாக இருப்பது, பின்னணியில் ‘கும்மியடி கும்மியடி’ என்ற பாடல் ஒலிப்பதுமான காட்சிகள் உள்ளன.
இந்த வீடியோவுக்கு கீர்த்தி பாண்டியன் உள்பட ஏராளமானோர் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com