எங்க மச்சான் சிரிச்சிட்டாருப்பா.. ஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்ட ரம்யா பாண்டியன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை ரம்யா பாண்டியன் திருமணம் 2 நாட்களுக்கு முன் நடந்த நிலையில், தற்போது அவர் ஹனிமூன் சென்ற புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில், அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் திரை உலகின் நடிகை மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக இருந்தவர் ரம்யா பாண்டியன். சமூக வலைதளத்தில், குறிப்பாக இன்ஸ்டாகிராமில், பிரபலமாக இருந்த இவரை சுமார் மூன்று மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள் என்பதும், அவ்வப்போது அவர் பதிவு செய்யும் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகும் என்பது தெரிந்தது.
இந்த நிலையில் தான் காதலித்த யோகா டீச்சரை கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட ரம்யா பாண்டியன், திருமணம் குறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாவில் பதிவு செய்திருந்தார் என்பதும் அவை வைரல் ஆகியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இமயமலை அருகில் உள்ள கங்கை நதியில் நடந்த இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், சற்றுமுன் ரம்யா பாண்டியன் தனது கணவருடன் ரிஷிகேசில் தேனிலவு கொண்டாடிய புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில், அந்த புகைப்படத்துக்கு லட்ச கணக்கில் லைக்குகள் மற்றும் நூற்றுக்கணக்கில் கமெண்டுகள் பதிவாகி வருகிறது. "எங்க மச்சான் சிரிச்சிட்டாருப்பா.. உள்பட பல கமெண்டுகள் இந்த புகைப்படத்துக்கு பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments