டைட்டான டிரஸ்.. தலைகீழாக போஸ்.. ரம்யா பாண்டியனின் வேற லெவல் யோகா வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகையும், பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா பாண்டியன் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பாக அவர் ஒர்க் அவுட் செய்யும், யோகா செய்யும் வீடியோக்களுக்கு லைக் குவியும் என்பது தெரிந்ததே.
அந்த வகையில் சற்றுமுன் ரம்யா பாண்டியன் தலைகீழாக யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியனுக்கு சுமார் மூன்று மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். அவ்வப்போது தனது பாலோயர்களை திருப்திப்படுத்துவதற்காக கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் ரம்யா பாண்டியன் சற்றுமுன் யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில் கண்ணாடி முன் நின்று டைட்டான வெள்ளை உடை அணிந்து அவர் தலைகீழாக நிற்கும் காட்சி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. இந்த பதிவில் யோகா குறித்து அவர் கூறியதாவது:
யோகா என்பது ஒரு இந்திய கலை மற்றும் அறிவியலாகும், இது பழங்காலத்திலிருந்தே உள்ளது, இதில் முக்கிய அம்சம் சுவாசம். சுவாசம் என்பது உள்ளிழுத்தல், வெளியேற்றுதல் மற்றும் மூச்சைப் பிடித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது. இது குறைபாடுகளை தவிர்க்கும் அதே வேளையில் அதன் பலன்களை பெறுவதற்கு முறையாகச் செய்யப்பட வேண்டும்.
ஒவ்வொரு ஆசனத்துடனும் முறையான சுவாசம் இரத்தத்தை ஆக்ஸிஜனேற்ற உதவுகிறது, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் முழுமையான உற்சாகத்தை அளிக்கிறது. யோகா பயிற்சியின் மூலம், தனிநபர்கள் அழகின் அதிசயத்தை அனுபவிக்க முடியும், ஏனெனில் அழகு பெரும்பாலும் ஒருவரின் உள்ளார்ந்த நல்வாழ்வின் பிரதிபலிப்பாகும்’ என கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com