close
Choose your channels

ஒரு ஜான் வயித்துக்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு.. ரம்யா பாண்டியன் வீடியோவுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

Thursday, July 4, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ரம்யா பாண்டியன் ஜிம்மில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ஒரு ஜான் வயித்துக்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு என்பது உட்பட பல கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

நடிகை மற்றும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார் என்பதும் தான் வைத்திருக்கும் சுமார் மூன்று மில்லியன் ஃபாலோயர்களுக்காக அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார் என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் சற்றுமுன் ரம்யா பாண்டியன் ஜிம்மில் கம்பியில் தொங்கி கொண்டு ஒர்க்-அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் மற்றும் நூற்றுக்கணக்கான கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

ரம்யா அக்கா நீங்க அழகு, நீங்க ஒரு கட்டழகி, அழகா செதுக்கி வச்ச சிலை மாதிரி இருக்கீங்க என்றும், கடின முயற்சி என்றும் தோல்வி அடையாது என்றும், நீங்க கம்பில தொங்கறது தெரியாம எவனோ ஒருத்தன் வீடியோ எடுத்துட்டு இருக்கான், ஒரு கை கொடுத்து எவனாவது இறக்கி விடுகிறானா என்றும் காமெடியாக பல கமெண்ட்ஸ் இந்த வீடியோவுக்கு பதிவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.