போன ஏப்ரல் முதல் இந்த ஏப்ரல் வரை.. என் வாழ்க்கையை மாற்றியது இதுதான்: ரம்யா பாண்டியன்..!

  • IndiaGlitz, [Tuesday,April 30 2024]

நடிகை ரம்யா பாண்டியன் போன ஏப்ரல் முதல் இந்த ஏப்ரல் வரை நான் இந்த கோவிலுக்கு சென்றதால் தான் என்னுடைய வாழ்க்கையே மாறிவிட்டது என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

தமிழ் திரையுலகின் நடிகைகளை ஒருவரான ரம்யா பாண்டியன், விஜய் டிவியில் ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி’ மற்றும் ’பிக்பாஸ்’ ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானார் என்பதும் அதன் பிறகு சில திரைப்படங்களில் அவர்கள் நடித்தார் என்பதும் தெரிந்தது.

அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராமில் அவருக்கு சுமார் மூன்று மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் அவ்வப்போது அவர் பதிவு செய்யும் கிளாமர் புகைப்படம் வீடியோக்கள், டிராவல் புகைப்படங்கள் ஆகியவை மிகப்பெரிய அளவில் வைரல் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்ற புகைப்படத்தை பதிவு செய்து அந்த கோவிலுக்கு சென்றதால் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்களையும் கூறியுள்ளார். இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

திருவண்ணாமலை என் இதயத்தில் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது. என் வாழ்க்கையை மாற்றிய கோவில் இதுதான். கடந்த ஏப்ரல் முதல் இந்த ஏப்ரல் வரை, ஒவ்வொரு மாதமும் நான் கிரிவலம் சென்றதால், இந்த கோவில் என்னுடைய ஆன்மீக தொடர்பை குறிக்கும் வகையில் உள்ளது. நான் செல்லும் ஒவ்வொரு கோயிலும் தெய்வீக அழைப்பாக உணர்கிறேன். மேலும் இந்த பயணத்தால் நான் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டதாக கருதுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.