காக்கா போல் வேற லெவலில் யோகா.. ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை ரம்யா பாண்டியன் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மட்டும் இன்றி யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவார் என்பதும் அவை அவரது ஃபாலோயர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சற்றுமுன் வேற லெவலில் யோகா செய்யும் வீடியோ ஒன்றை அவர் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோவில் பகாசனா என்ற யோகாவை குறிப்பிட்டுள்ள ரம்யா பாண்டியன், காகம் போல் இருக்கும் போஸ் கொடுத்து யோகா செய்கிறார். கை சமநிலை மற்றும் மைய வலிமையை பயன்படுத்துதல் என்ற யோகாவை அவர் செய்து காட்டியுள்ளார்.
இந்த யோகா குறித்து மேலும் அவர் கூறிய போது ’இந்த நம்ப முடியாத பயணத்தில் நாம் முயற்சி செய்வது மட்டுமே முக்கியம். நாம் விரும்பும் திசையில் நம்மை வளைக்க இந்த பயிற்சி மிகவும் முக்கியம். இது அதிக மாற்றங்களை கொண்டு வரும். அனைவருக்கும் சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள், தொடர்ந்து பயிற்சி செய்து முன்னேறுவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com