close
Choose your channels

நல்ல வேளை ஊசி தெரிகிற மாதிரி போட்டோ இருக்கு: ரம்யா பாண்டியன் தடுப்பூசி புகைப்படத்திற்கு கமெண்ட்ஸ்

Friday, May 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போடுவது குறித்த விழிப்புணர்வை தமிழக சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ் திரையுலக பிரபலங்களும் தடுப்பூசிகளை போட்டு அதன் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்தை அடைந்த நடிகை ரம்யா பாண்டியன் தடுப்பூசி போட்டுக் கொண்டார். அவர் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

தடுப்பூசி போடும்போது கூட சிரித்துக்கொண்டே இருக்கிறார்களே, அது தான் ரம்யா பாண்டியன் என்றும், நல்ல வேலை ஊசி தெரியும் மாதிரி ஃபோட்டோ எடுத்தீங்க என்பது போன்ற கமெண்ட்ஸ்களும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ரம்யா பாண்டியன் இந்த புகைப்படத்தை பதிவு செய்து ஒரு மணி நேரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்ஸ்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment