பிஎம்டபிள்யூ கார் வாங்கிய ரம்யா பாண்டியன்: ரஜினி ஸ்டைலில் வாழ்த்து கூறிய சகோதரர்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் சீசன் 4 மற்றும் குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவராகிய ரம்யா பாண்டியன் தற்போது புதிய பிஎம்டபிள்யூ கார் வாங்கி உள்ளார். இந்த காரில் அவர் இருப்பது போன்ற புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ரம்யா பாண்டியன். இவர் 100 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாக்குப்பிடித்து இருந்தார் என்பதும் கடைசி நேரத்தில் நடந்த ஒரு டாஸ்க்கில் சிங்கப் பெண் என்ற பாராட்டுப் பெற்றார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியனுக்கு தினமும் 75 ஆயிரம் சம்பளம் என்றும் அவர் 100 நாட்களுக்கும் மேல் இந்த நிகழ்ச்சியில் இருந்ததால் 7 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்துள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ரம்யா பாண்டியன் பிஎம்டபிள்யூ கார் வாங்கியுள்ளார். இந்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த அவருடைய சகோதரர் பரசுராம், ’அக்கா உன்னுடைய முதல் பிஎம்டபிள்யூ கார் வாழ்த்துக்கள். அப்படியே காரை எடுத்து கொண்டு 555 சிகரெட் ரெண்டு லூசில் வாங்கிக்கோ, நான் ராபின்சன்னுக்கு கால் செய்றேன், விட்றா வண்டியை ஈவிபிக்கு’ என்று பதிவு செய்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் முதலில் கார் வாங்கிய நிகழ்வை நிகழ்ச்சி ஒன்றில் கூறியது போல் பரசுராம் வாழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2011ல் 21ஜி பஸ்ஸில் சென்றாய், 2021ல் பிஎம்டபிள்யூ கார் வாங்கியுள்ளாய். நல்லவனுக்கு நல்லதே நடக்கும்’ என்று பதிவு செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com