இயக்குனராகும் பிரபல நடிகை: பத்ரி வெங்கடேஷ் வாழ்த்து
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 2006 ஆம் ஆண்டு ’ஒரு நாள் ஒரு கனவு’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி அதன் பின்னர் ’ராமன் தேடிய சீதை’, ‘குள்ளநரிக்கூட்டம், ’பீட்சா’ ’சேதுபதி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா நம்பீசன். இவர் நடிகையாக மட்டுமின்றி ஒரு நல்ல பாடகி என்பதும் பல தமிழ் மற்றும் மலையாளப் பாடல்களைப் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நடிகை, பாடகியை அடுத்து தற்போது நடிகை ரம்யா நம்பீசன் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். ரம்யா நம்பீசன் இயக்கியுள்ள முதல் குறும்படத்திற்கு ‘அன்ஹைட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த குறும்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் விரைவில் யூடியூப் சேனலில் இந்த குறும் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரம்யா நம்பீசன் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளதை அடுத்து பிரபல இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்
ரம்யா நம்பீசன் தற்போது ‘தமிழரசன்’, ’ரேஞ்சர்,’ ஷிவா’, ‘கெட்ட பையன் சார் இவன்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
#Ramyanambessandirection1#ramyanambessanencore welcome to the world of directors @nambessan_ramya. It has been a natural and a beautiful metamorphosis for you to be the auteur. This #unhide is too powerful Miles to go @sshritha9 pic.twitter.com/71FdCIx1Jt
— Badri Venkatesh (@dirbadri) February 15, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments