பட வாய்ப்புக்காக படுக்கை குறித்து ரம்யா நம்பீசன்

  • IndiaGlitz, [Thursday,April 19 2018]

கடந்த சில மாதங்களாகவே கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பட வாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் விவகாரம் குறித்து நடிகைகள் வெளிப்படையாக பேசி வருகின்றனர். குறிப்பாக சமீபத்தில் நடிகை ஸ்ரீரெட்டி இந்த விஷயத்தில் ஒரு பெரும் புயலையே கிளப்பிவிட்டார். இந்த புயலில் பல பெரிய மனிதர்களின் மானம் பறந்து போய்விட்டது

இந்த நிலையில் இதுகுறித்து பிரபல தமிழ் நடிகை ரம்யா நம்பீசன் கூறியபோது, 'பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் சினிமாவில் இல்லை என்று கூற முடியாது. அதிர்ஷ்டவசமாக இந்த பிரச்சனையை நான் சந்திக்கவில்லை என்றாலும் என்னுடைய தோழிகள் மூலம் இதை கேள்விப்பட்டிருக்கின்றேன். இதற்காக வெட்கப்படுகிறேன்.

மேலும் படுக்கைக்கு அழைப்பது என்பது சினிமாத்துறையில் மட்டுமில்லை, அனைத்து துறைகளிலும் உள்ளது. இதனை எதிர்த்து பெண்கள் குரல் கொடுக்க வேண்டும். பெண்கள் இதுகுறித்து தைரியமாக வெளியே பேசினால்தான் குற்றம் செய்பவர்களுக்கு பயம் ஏற்படும்' என்று கூறியுள்ளார்.