சிவகாமி ரம்யாகிருஷ்ணனின் கிரிக்கெட் அவதாரம்?

  • IndiaGlitz, [Sunday,September 20 2015]

எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி' படத்தின் கம்பீரமான ராஜாமாதா சிவகாமி கேரக்டரில் அற்புதமாக நடித்து பெயர் வாங்கிய நடிகை ரம்யா கிருஷ்ணன், தற்போது அடுத்து ஒரு படத்தில் வித்தியாசமான அம்மா கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஒன்றை இயக்குனர் சனா யாடிரெட்டி என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஸ்ரீசாந்த்தின் அம்மாவாக நடிக்க ரம்யாகிருஷ்ணன் ஒப்பந்தமாகியுள்ளார்.

மிடில்கிளாஸ் குடும்பத்தில் பிறந்த ஒரு இளைஞன், அகில இந்திய அளவில் கிரிக்கெட் வீரராக எப்படி வெற்றி பெறுகிறார் என்பதே இந்த படத்தின் கதை என்றும் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், செண்டிமெண்ட் அம்மாவாக இல்லாமல் மகனுக்கு ஒரு தோழியாக இருப்பவர் என்றும், மகனின் கிரிக்கெட் ஆசைக்கு உறுதுணையோடு இருப்பதோடு மகனுக்கு சிறந்த கோச் ஆகவும் உள்ள ஒரு சிறப்பான கேரக்டர் என்றும் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ள பிரகாஷ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த திரைபடம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகி வருவதாகவும், ஒரே நேரத்தில் அனைத்து மொழிகளிலும் ரிலீஸ் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.