வயசானாலும் ஸ்டைலும் அழகும் போகவே இல்லை: ரம்யா கிருஷ்ணனின் நீச்சல்குள புகைப்படத்திற்கு குவியும் கமெண்ட்ஸ்!

  • IndiaGlitz, [Tuesday,March 16 2021]

கடந்த 25 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் கதாநாயகி, குணசித்திர வேடங்கள் உள்பட பல வேடங்களில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணனின் நீச்சல் குள புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது 

சிவாஜி கணேசன் ரஜினிகாந்த் நடித்த ’படிக்காதவன்’ என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் மனதில் இடம் பிடித்த ரம்யா கிருஷ்ணன், அதன் பின்னர் பல திரைப்படங்களில் நடித்தார். குறிப்பாக சமீபத்தில் வெளியான பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய  திரைப்படங்கள் இவருக்கு மிகப் பெரிய புகழை பெற்றுத் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் அவ்வப்போது தனது குடும்ப புகைப்படங்களையும், தான் நடித்து வரும் படங்களின் புகைப்படங்களையும் பதிவு செய்து வருவார்

இந்த நிலையில் தற்போது அவர் நீச்சல் குளத்தில் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். எந்த நேரமும் மகிழ்ச்சியாக இருந்தால் நம்முடைய ஸ்டைல் நம்மை விட்டு போகாது என்ற கேப்ஷனுடன் பதிவு செய்துள்ள இந்த புகைப்படத்திற்கு ’வயசானாலும் உங்க ஸ்டைலும் அழகும் உங்களை விட்டு போகவே இல்லை’ என ரசிகர்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகிறார்கள்

More News

ரஜினியின் 'அண்ணாத்த' படத்தில் இணைந்த பிரபல நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' திரைப்படத்தில் ஏற்கனவே ஒரு நட்சத்திர கூட்டமே குவிந்துள்ள நிலையில் தற்போது பிரபல தமிழ், தெலுங்கு நடிகரும் இணைந்துள்ள தகவல்

சமீபத்தில் பிறந்த குழந்தையுடன் செல்வராகவன் மனைவி: வைரல் புகைப்படம்!

தமிழ் திரை உலகின் வித்தியாசமான இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் இயக்கிய 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும்

மாலத்தீவு தான் ஹனிமூனுக்கு பெஸ்ட்: பும்ராவுக்கு ஐடியா கொடுத்தது யார் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் பும்ராவுக்கும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் தொகுப்பாளினியாக பணிபுரியும் சஞ்சனா கணேசனுக்கும் நேற்று கோவாவில் சிறப்பாக திருமணம் நடைபெற்றது.

ஆட்டுக் குட்டியுடன் செல்ஃபி… இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்… வைரல் வீடியோ!

செல்ஃபி எடுக்கும் பழக்கம் தேவையைத் தாண்டி தற்போது ஒரு போதையாகவே மாறிவிட்டது. இதனால் எதைப் பார்த்தாலும் செல்போனை நீட்டிக் கொண்டு பல இளசுகள் செல்ஃபி எடுக்க துவங்கி விடுகின்றனர்.

அசத்தலாக புல்லட்டில் வலம் வரும் அம்மா நடிகை: வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம்!

பாக்யராஜ் இயக்கி நடித்த 'வீட்ல விசேஷங்க' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி திரைப்படம் மற்றும் சின்னத்திரை ஆகியவற்றில் புகழ்பெற்ற நடிகை ஒருவர் புல்லட்டில் வலம் வரும் வீடியோவை