என்னை கண்டுபிடியுங்கள் பார்ப்போம்: பள்ளி குரூப் புகைப்படத்தை பதிவு செய்த 'பாகுபலி' நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் திரையுலகில் இருந்தாலும் அவருக்கு பேரும் புகழும் வாங்கி கொடுத்தது ஒரு சில கேரக்டர் மட்டுமே. அந்த வகையில் ’படையப்பா’ நீலாம்பரி கேரக்டருக்கு பிறகு அவர் ஏற்று நடித்த ’பாகுபலி’ சிவகாமி கேரக்டர் உலகப் புகழ் பெற்றது. அந்த கேரக்டரின் அவர் சிறப்பாக நடித்ததால் தென்னிந்திய திரையுலகின் முன்னணி குணசித்திர நடிகையாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த கொரோனா விடுமுறையில் கடந்த சில நாட்களாக தனது சமூக வலைத்தளத்தில் அசத்தலான புகைப்படங்களை பதிவு செய்து வரும் ரம்யா கிருஷ்ணன் தனது பள்ளிக்கால குரூப் புகைப்படம் ஒன்றை பதிவு செய்து, அதில் தன்னை கண்டுபிடியுங்கள் பார்ப்போம் என்று ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
பெரும்பாலான ரசிகர்கள் சரியாக ரம்யா கிருஷ்ணனை கண்டுபிடித்த பின்னர் ஒரு மணிநேரம் கழித்து கண்ணாடி அணிந்த சிறுமிதான் தான் என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை ரம்யாகிருஷ்ணன் தற்போது அமிதாப்பச்சன் தமிழில் அறிமுகமாகும் ‘உயர்ந்த மனிதன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ‘குயீன்’ வெப்தொடரில் நடித்த ரம்யாகிருஷ்ணன், இந்த தொடரின் இரண்டாம் பாகத்திலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout