அந்த நபரை சும்மா  விடக்கூடாது.. பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்த ரம்யா கிருஷ்ணன்..!

  • IndiaGlitz, [Sunday,October 08 2023]

நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜாவை சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அந்த நபரை சும்மா விடக்கூடாது என நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆவேசமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி என்பவர் நடிகை ரோஜா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். ரோஜா ஆபாச படத்தில் நடித்துள்ளார் என்றும் அந்த வீடியோவை வெளியிடுவேன் என்றும் அவர் கூறியது பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் ஏற்கனவே அமைச்சர் ரோஜாவுக்கு நடிகை ராதிகா உட்பட பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் ’இந்தியா என்ற தாயை பெண்ணாக மதித்து நாம் கொண்டாடி வருகிறோம். ஆனால் அதே நாட்டில் இதுபோன்ற விஷயங்கள் நடக்கிறது. ரோஜாவை மோசமாக விமர்சனம் செய்த அந்த நபரை சும்மா விடக்கூடாது, மன்னிக்கக் கூடாது, நான் ரோஜாவுக்கு துணை நிற்கிறேன்.

இது குறித்து பிரதமர் மோடி அவர்கள் தலையிட்டு சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசி உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

வார்னிங் ஸ்ட்ரைக் கொடுத்த கமல்ஹாசன்.. பிக்பாஸ் போட்டியாளர் அதிர்ச்சி..!

உலகநாயகன் கமல்ஹாசன் பிக்பாஸ் போட்டியாளர் ஒருவருக்கு வார்னிங் ஸ்ட்ரைக் கொடுத்தார் என்பதும் மூன்று முறை ஸ்ட்ரைக் பெற்றால் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரித்தார்

அருவியில் ஆனந்தக் குளியல்... செம்ம வீடியோவை வெளியிட்ட நடிகை அமலாபால்..!

நடிகை அமலா பால் தனது சமூக வலைத்தளத்தில் அருவியில் ஆனந்தமாக குளிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்துள்ளது.

ரோலக்ஸ் தம்பி கேரக்டர்.. ஆடிஷனுக்கு அழைக்கப்பட்ட பிரபல நடிகரின் மகன்.. அதன் பின் ஏற்பட்ட அதிர்ச்சி..!

https://tamil.asianetnews.com/gallery/cinema/famous-actor-son-cheated-by-using-the-name-of-leo-movie-director-lokesh-kanagaraj-gan-s25ljs#image4

'லியோ'வுக்கு முன் 3 படங்களில் த்ரிஷாவுக்கு குரல் கொடுத்த சின்மயி.. மூன்றுமே சூப்பர் ஹிட்..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படத்தில் நடிகை த்ரிஷா நாயகியாக நடித்துள்ளார் என்பதும், அவருக்கு இந்த படத்தில் பின்னணி குரல் கொடுத்தது பாடகி சின்மயி என்பதையும் பார்த்தோம்.

விசித்ரா- ஜோவிகா விவகாரம் குறித்து பேசிய கமல்ஹாசன்.. சைலண்ட் ஆன போட்டியாளர்கள்..!

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று முதல் முறையாக கமல்ஹாசன் தோன்றும்  எபிசோட் என்பதால்