எதிர்பாராததை எதிர்பாருங்கள்: முதல் நாளே அசத்திய ரம்யாகிருஷ்ணன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 54 நாட்களாக தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் அவர்கள் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து கமல்ஹாசனும் ஸ்டூடியோவில் இருந்து ரம்யா கிருஷ்ணனும் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகின்றனர் என்பதை முதல் புரமோவில் பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் வெளியாகி உள்ள இரண்டாவது புரமோவில் ரம்யா கிருஷ்ணன் மாஸாக என்ட்ரி ஆகி பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் நலம் விசாரிக்கிறார். குறிப்பாக இமான் அண்ணாச்சியிடம் ஊறுகாய் கிடைத்ததா என்று அவர் கேட்பது சூப்பராக இருந்தது. நேற்றைய பலூன் டாஸ்க்கில் ஒவ்வொரு பலூனையும் உடைக்கும்போது ’ஊறுகாய் வேண்டும் ஊறுகாய் வேண்டும்’ என்று இமான் அண்ணாச்சி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தாமரை உள்பட பலரையும் முதல் நாளே ரம்யா கிருஷ்ணன் அசத்தி விட்டார் என்பதும் ’எதிர்பாராததை எதிர் பாருங்கள்’ என்று அவர் தனது பாணியில் ஸ்டைலாக கூறியதை பார்க்கும்போது கமல்ஹாசன் இல்லாத குறையை போக்கும் அளவுக்கு ரம்யா கிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

என்ன நடக்குது அபினவ்வுக்கும் பாவனிக்கும்: குறும்படம் அல்ல பெரும்படம் இதோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியை நேற்று பார்த்தவர்களுக்கு ராஜூ கேட்ட ஒரு கேள்வி பெரும் அதிர்ச்சியாக இருந்திருக்கும். அப்படி என்ன கேள்வி கேட்டார் என்பது தெரியுமா?

வெளியில் ஒரு வதந்தி பரவுது: பிக்பாஸ் ரம்யாகிருஷ்ணன்

பிக்பாஸ் நிகழ்ச்சியை நேற்று முதல் முறையாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார் என்பதும் அவரது பாணியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் சுவராசியமாக சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மோசடி மன்னனுடன் முத்தம்: புகைப்படம் வைரலானதால் அதிர்ச்சியில் பிரபல நடிகை!

பிரபல நடிகை ஒருவர் மோசடி மன்னனுக்கு முத்தம் கொடுத்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கவனமாக இருக்க வேண்டும்: திரைப்படத்துறையை விமர்சனம் செய்வது குறித்து அண்ணாமலை கருத்து!

திரைப்படத் துறையை தேவையில்லாமல் விமர்சனம் செய்ய வேண்டாம் என்றும் அவ்வாறு விமர்சனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டாலும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

கொரோனா வந்தாலும் கமல்ஹாசன் நன்றாக இருப்பதற்கு இதுதான் காரணம்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட போதிலும் கமலஹாசன் நன்றாக இருக்கிறார் என்றால் அதற்கு இதுதான் காரணம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.