close
Choose your channels

அடுப்பே பற்ற வைக்காமல் சூப்பர் டிஷ் செய்த ரம்யா கிருஷ்ணன்.. வேற லெவல் வீடியோ..!

Wednesday, May 8, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ரம்யா கிருஷ்ணன் அடுப்பே பற்றவைக்காமல் செய்த டிஷ் ஒன்றின் வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரை உலகில் கடந்த 1983 ஆம் ஆண்டு 'வெள்ளை மனசு’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ரம்யா கிருஷ்ணன், அதன் பிறகு பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பாக ’படையப்பா’ மற்றும் ’பாகுபலி’ படங்களில் அவர் நடித்த கேரக்டர் மிகப்பெரிய அளவில் புகழைப் பெற்றுக் கொடுத்தது என்பது தெரிந்தது

இந்த நிலையில் தற்போது கூட அவர் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் சமீபத்தில் வெளியான மகேஷ் பாபுவின் ’குண்டூர்காரம்’ படத்தில் கூட அவர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் தெரிந்தது

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கு ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் அவ்வப்போது அதில் அவர் தனது திரைப்படங்கள் மற்றும் குடும்ப புகைப்படங்களையும் பதிவு செய்து வருவார்

அந்த வகையில் சற்றுமுன் நபர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஆவக்காய் பச்சடி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அடுப்பே பற்ற வைக்காமல் அவர் ஆவக்காயை நறுக்கி அதில் மிளகாய் பொடி உள்பட சிலவற்றை கலந்து மேலே எண்ணெய் ஊற்றி செய்துள்ளதை பார்த்து ரசிகர்கள் இந்த வீடியோவுக்கு லைக்ஸ்களை குவித்த வண்ணம் உள்ளனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment