close
Choose your channels

ரஜினி பட வதந்திக்கு மறுப்பு தெரிவித்த பிரபல நடிகை

Friday, July 15, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் அனுபவம் வாய்ந்த சீனியர் நடிகைகளில் ஒருவராக விளங்கி வரும் ரம்யாகிருஷ்ணனுக்கு 'பாகுபலி' படம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றால் அது மிகையில்லை. தற்போது அவர் 'பாகுபலி 2' படத்திலும், கமல்ஹாசனின் 'சபாஷ் நாயுடு' படத்தில் அவருடைய மனைவியாகவும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ரம்யாகிருஷ்ணன் சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமானதாக செய்திகள் வெளிவந்தது. ஒரே நேரத்தில் கமல், ரஜினி ஆகியோர்களின் படங்களில் அவர் நடித்து வருவதாக பெருமையாக கூறப்பட்ட நிலையில் இந்த செய்தி வெறும் வதந்தி என்று ரம்யாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
ரஜினியின் '2.0' படத்தில் நடிக்க தன்னை யாரும் இதுவரை அணுகவில்லை என்றும் இந்த தகவல் முழுக்க முழுக்க வதந்தி என்றும் தற்போது பாகுபலி 2' மற்றும் சபாஷ் நாயுடு' படங்களில் மட்டுமே நடித்து வருவதாகவும் அவர் விளக்கமளித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment