ரஜினி பட வதந்திக்கு மறுப்பு தெரிவித்த பிரபல நடிகை

  • IndiaGlitz, [Friday,July 15 2016]

கோலிவுட் திரையுலகில் அனுபவம் வாய்ந்த சீனியர் நடிகைகளில் ஒருவராக விளங்கி வரும் ரம்யாகிருஷ்ணனுக்கு 'பாகுபலி' படம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றால் அது மிகையில்லை. தற்போது அவர் 'பாகுபலி 2' படத்திலும், கமல்ஹாசனின் 'சபாஷ் நாயுடு' படத்தில் அவருடைய மனைவியாகவும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ரம்யாகிருஷ்ணன் சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமானதாக செய்திகள் வெளிவந்தது. ஒரே நேரத்தில் கமல், ரஜினி ஆகியோர்களின் படங்களில் அவர் நடித்து வருவதாக பெருமையாக கூறப்பட்ட நிலையில் இந்த செய்தி வெறும் வதந்தி என்று ரம்யாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
ரஜினியின் '2.0' படத்தில் நடிக்க தன்னை யாரும் இதுவரை அணுகவில்லை என்றும் இந்த தகவல் முழுக்க முழுக்க வதந்தி என்றும் தற்போது பாகுபலி 2' மற்றும் சபாஷ் நாயுடு' படங்களில் மட்டுமே நடித்து வருவதாகவும் அவர் விளக்கமளித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

More News

ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபு பட ஹீரோயின் அதிகாரபூர்வ அறிவிப்பு

இளையதளபதி விஜய் நடித்த 'கத்தி' என்ற சூப்பர் ஹிட் படத்தை அடுத்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'அகிரா'...

நேற்று 'மொட்டசிவா கெட்டசிவா', இன்று 'சிவலிங்கா'

கோலிவுட் திரையுலகில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பல அவதாரங்களில் ஜொலித்து வரும் ராகவா லாரன்ஸ் நடித்த 'மொட்டசிவா கெட்டசிவா'...

நடிகை சமந்தாவின் தப்பாத 'தெறி' கணக்கு

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக விளங்கி வரும் நடிகை சமந்தா நடித்த 'கத்தி', தெறி' மற்றும்...

'கபாலி'க்காக கோர்ட் படியேறிய கலைப்புலி எஸ்.தாணு

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க ரசிகர்களுக்கு மட்டுமின்றி படக்குழுவினர்களுக்கு டென்ஷன்...

சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் 'கபாலி' பிரிமியர்?

புதிய படங்களின் பிரிமியர் காட்சிகள் இதுவரை வெளிநாட்டில் மட்டுமே நடந்து வருகிறது. ஆனால் சூப்பர் ஸ்டாரின் ரஜினிகாந்த் படம்...