வனிதா-ரம்யா கிருஷ்ணன் மோதலில் நடந்தது என்ன? வைரல் வீடியோ

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியின்போது நடிகைகள் வனிதா மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தான் விலகுவதாகவும் வனிதா தெரிவித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

ஏற்கனவே இந்த நிகழ்ச்சி குறித்து புரோமோ வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் ஒரு புறமும் வீடியோ வெளியாகி உள்ளது. அதில் வனிதாவின் உடை மற்றும் அலங்காரத்தை பாராட்டிய ரம்யா கிருஷ்ணன், அவருடைய நடனத்தை விமர்சனம் செய்தார். அதேபோல் இன்னொரு நடுவரான நடிகர் நகுலும் விமர்சனம் செய்தார். உடனே வனிதா மற்றவர்களுடன் தன்னை ஒப்பிட வேண்டாம் என்று கூற இரண்டு போட்டியாளர்களை ஒப்பிட கூடாது என்று எப்படி கூறலாம்? நான் எப்படி தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கூறுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று ரம்யா கிருஷ்ணன் கூற, அதற்கு வனிதாவும் தனது விளக்கத்தை கொடுத்தார். பின்னர் வனிதா அங்கிருந்த வெளியேறுவதும் அவரை ரம்யா கிருஷ்ணன் கோபத்துடன் பார்ப்பதுடன் இந்த வீடியோ முடிகிறது.

இந்த நிகழ்ச்சி வரும் ஞாயிறு இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள நிலையில் அந்த நிகழ்ச்சியை முழுவதும் பார்த்தால் இந்த நிகழ்ச்சியில் வனிதா மற்றும் ரம்யா கிருஷ்ணனுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் முழு காரணம் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது. வனிதா-ரம்யா கிருஷ்ணன் மோதல் குறித்த இந்த புரமோ வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

More News

பின்னணி பாடகியின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை: 5 பேர் மீது பாய்ந்தது போக்சோ சட்டம்!

பிரபல பின்னணி பாடகி ஒருவரின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 5 பேர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ள தகவல்

யாஷிகாவின் டுவிட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரேம்ஜி! காரணம் என்ன?

பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகை யாஷிகாவின் டுவிட்டை பார்த்து நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அதிர்ச்சி அடைந்துள்ளார் 

ஏ.ஆர்.ரஹ்மானை யாரென்றே தெரியாது: சீனியர் நடிகரின் பேட்டியால் பரபரப்பு!

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமா உலகிலும், ஏன் உலக அரங்கிலும் ஏஆர் ரஹ்மான் புகழ்பெற்றவர் என்பதும், இரண்டு ஆஸ்கார் விருதுகளை வாங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் என்பதும்

"நானும் பிராமணனே"....! நேரலையில் சர்ச்சையை கிளப்பிய பிரபல கிரிக்கெட்டரின் பேச்சு....!

நேரலையில் பேசும் போது, "நானும் பிராமணன் தான்"  என்று சுரேஷ் ரெய்னா கூறியிருப்பது,

கேலி செய்த தனுஷ் ரசிகர்களுக்கு விளக்கம் அளித்த இசையமைப்பாளர்!

தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் இசை ஒரு முக்கிய காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.