'தளபதி 64' படத்தில் இணைந்த மேலும் ஒரு இளம் நடிகை!

  • IndiaGlitz, [Saturday,November 09 2019]

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை அவ்வப்போது சில ஆச்சரியமான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் பட்டியல் அனைவருக்கும் ஆச்சரியத்தை தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மேனன் மற்றுமொரு முக்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா, மேலும் சில முக்கிய கேரக்டர்களில் சாந்தனு, அந்தோணி வர்கீஸ் உள்பட பலர் ஆகியோர் இந்த படத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் மேலும் ஒரு இளம் நடிகை இணைந்துள்ளார்.

விஜய் நடித்த பல படங்களின் ஆடியோ விழாக்களை தொகுத்து வழங்கிய ரம்யா தான் அந்த இன்னொரு நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் தான் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகவும், இதற்குள் மேல் என்னுடைய கேரக்டர் குறித்து கூற முடியாது என்றும் அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தற்போது ’தளபதி 64’ படப்பிடிப்பிற்காக டெல்லியில் இருப்பதாகவும் விஜய்யின் ரசிகையாக அவரை தூரத்தில் நின்று பார்த்து ரசித்து கொண்டிருந்த தனக்கு, தற்போது விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் தன்னுடைய வாழ்க்கை முழுமை அடைந்து விட்டதாக தாம் கருதுவதாகவும் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் திறமையான இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More News

நவம்பர் 22ல் வெளியாகும் ஸ்ருதிஹாசனின் ஹாலிவுட் படம்!

உலக நாயகன் கமல்ஹாசன் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன், கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்த நிலையில்

துணிச்சலான தயாரிப்பு: 'கைதி' படத்திற்கு பிரபல இயக்குனர் பாராட்டு!

கார்த்தி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த தீபாவளி விருந்தாக அக்டோபர் 25ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் 'கைதி'. விஜய் நடித்த 'பிகில்' என்ற பிரம்மாண்டமான படத்துடன் வெளிவந்த இந்த

வேலை இழந்த பெண்ணுக்கு 1000க்கும் மேற்பட்ட வாய்ப்புகள்: எப்படி இந்த மேஜிக்

வீட்டு வேலையை இழந்த பெண் ஒருவருக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து வாய்ப்புகள் குவியத்தொடங்கியுள்ளது. இந்த மேஜிக் ஒரே ஒரு விசிட்டிங் கார்டினால் வந்தது என்றால் நம்ப முடிகிறதா?

ஹீரோவை திருப்திபடுத்த தயாரிப்பாளரை அழிப்பதா? பிரபல இயக்குனர் காட்டம்

மாஸ் நடிகர்களை வைத்து படமெடுக்கும் இயக்குனர்கள், அந்த படத்திற்கு தேவைக்கும் அதிகமாக செலவு செய்வதால் தயாரிப்பாளர்களுக்கு போட பணமே திரும்ப வருவதில்லை

பாகுபலிக்காக முயற்சிக்கும் மணிரத்னம்

பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கிய பாகுபலி மற்றும் 'பாகுபலி 2' ஆகிய இரண்டு திரைப்படங்களும் உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூலை அள்ளியது