பிக்பாஸ் வீட்டை விட்டு இன்று வெளியேறும் நபர் இவர்தான்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் இருந்து வாரம் ஒருவர் வெளியேறி வருகின்றனர். இதுவரை மமதி, அனந்து, நித்யா ஆகியோர் வெளியேறி இருக்கும் நிலையில் இன்று வெளியேறும் நபர் யாராக இருக்கும் என்பது குறித்து அறிந்து கொள்ள அனைவருக்கும் ஆவல் இருக்கும்.
இந்த நிலையில் எவிக்சன் பட்டியலில் இடம்பெற்றுள்ள ரம்யா, பொன்னம்பலம், பாலாஜி, ஜனனி மற்றும் ஐஸ்வர்யா ஆகிய ஐவரில் ஒருவர் இன்று வெளியேறுகிறார். ஐஸ்வர்யாதான் வெளியேற வேண்டும் என்று பார்வையாளர்கள் பலர் விரும்பினாலும் யார் வெளியேறுவது என்ற முடிவை தற்போது பிக்பாஸ் தான் முடிவு செய்வதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று ஒளிபரப்பாக்கும் நிகழ்ச்சியின் படப்பிடிப்பை நேரில் பார்த்த ஒருசிலர் பதிவு செய்த டுவிட்டில் இருந்து ரம்யா தான் இன்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் ரம்யா வீட்டை விட்டு வெளியே வரும் புகைப்படமும் டுவிட்டரில் வெளியாகியுள்ளது. எனவே இந்த வாரம் ரம்யா வெளியேறியதாக தெரியவந்தாலும் இன்று இரவு வரை பொறுத்திருந்து அது எந்த அளவுக்கு உண்மை என்பதை பார்ப்போம்.
#பிக்பாஸ் இல்லத்தை விட்டு வெளியேறப்போகும் போட்டியாளர் யார்?! ????#BiggBossTamil - இன்று இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. @ikamalhaasan #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/2mm7o7gLfO
— Vijay Television (@vijaytelevision) July 22, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com