எவிக்சன் பாஸ்: சுரேஷின் வேற லெவல் தந்திரத்தை கண்டுபிடித்த ரம்யா! 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய காட்சிகள் அனைத்தும் விறுவிறுப்பாக இருந்தது. குறிப்பாக எவிக்சன் பாஸ் என்று கூறப்படும் பாஸை பெறுவதற்காக சுரேஷ் சக்கரவர்த்தி செய்த தந்திரத்தை மிகவும் புத்திசாலித்தனமாக கண்டுபிடித்த ரம்யாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

நாமினேஷனில் சிக்கிய 7 பேர் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகிய 8 பேரில் எவிக்சன் பாஸை பெறுவது யார் என்பது குறித்த விவாதம் நடந்தது. இதில் முதலில் சுரேஷ் சக்ரவர்த்தி ஒவ்வொருவராக நாமினேஷன் செய்தார். முதலில் சனம் அதன்பின்னர் ரேகா, ஷிவானி, ஆகியோர்களை வெளியேற்றினார். அதன்பின் கேப்ரியாவை வெளியேற்றும்போது ‘நீங்களே நாமினேஷன் செய்கிறீர்களே, நான் ஏன் உங்களை நாமினேஷன் செய்யக்கூடாது’ என்ற கேள்வியை எழுப்பினார். ஆனால் கேப்ரியாவை பேசவிடாமல் அவரை குழப்பி அவரையும் வெளியேற்றினார் சுரேஷ். அப்போதுதான் ரம்யா சுதாரித்து கொண்டார்.

சுரேஷ் சக்கரவர்த்தி தன்னை யாருமே நாமினேஷன் செய்ய விடாமல் அவர் மிகவும் தந்திரமாக விளையாடினார் என்பதை கடைசி நேரத்தில் கண்டுபிடித்த ரம்யா பாண்டியன், அதிரடியாக நான் உங்களை நாமினேட் செய்கிறேன் என்று கூறியதும் சற்று அதிர்ச்சி அடைந்த சுரேஷ் மீண்டும் சமாளித்து ஆஜித்தை நாமினேஷன் செய்ய முயற்சித்தார். ஆனால் ரம்யா விடாப்பிடியாக அவரது தந்திரத்தை கண்டுபிடித்து சுரேஷை தான் நாமினேஷன் செய்வதாக கூறினார். இதனை ஆஜித்தும் ஏற்றுக் கொண்டதால் வேறு வழியின்றி சுரேஷ் சக்ரவர்த்தி அந்த அறையை விட்டு வெளியேறினார்.

அதன் பின்னர் ரம்யா பாண்டியன் மற்றும் ஆஜித் ஆகிய இருவருக்கும் இடையே எவிக்சன் பாஸை யார் பெற்றுக் கொள்வது என்கிற விவாதத்தில் ரம்யா பாண்டியன் ஆஜித்துக்கு விட்டுக் கொடுத்தார் என்பதும் அந்த எவிக்சன் பாஸை ஆஜித் பெற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுரேஷ் சக்கரவர்த்தியின் வேற லெவல் தந்திரத்தை புத்திசாலித்தனமாக கண்டுபிடித்த ரம்யாவை சக போட்டியாளர்களும் பாராட்டினர்.