ராம் பொத்தினேனி அடுத்த படம்.. மைசூரில் படப்பிடிப்பு..

  • IndiaGlitz, [Wednesday,June 07 2023]

பிளாக்பஸ்டர் மேக்கர் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொத்தினேனி நடிப்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் உருவாகி வரும் #BoyapatiRAPO படத்தின் மைசூர் ஷெட்யூல் தொடங்கியது!

பிளாக்பஸ்டர் இயக்குநர் போயபதி ஸ்ரீனு மற்றும் உஸ்தாத் ராம் பொதினேனியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான #BoyapatiRAPO வின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை படக்குழு இன்று மைசூரில் தொடங்குகிறது. இம்மாதம் 15ம் தேதி வரை நடக்கும் இந்த ஷெட்யூலில், அதிரடியான ஆக்ஷன் காட்சியும், ஒரு பாடல் படமாக்கப்பட உள்ளது. ஒரு பாடலைத் தவிர படத்தின் மொத்த படப்பிடிப்பும் இந்த ஷெட்யூல் உடன் முடித்துவிடும். மைசூர் விமான நிலையத்திலிருந்து ராம் மற்றும் ஸ்ரீ லீலாவின் கேண்டிட் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

ராமின் பிறந்தநாளுக்கு வெளியிடப்பட்ட முதல் பார்வையில் அவரை முரட்டுத்தனமான, மாஸ் தோற்றத்துடன் காட்டியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது.

சந்தோஷ் டிடேக் ஒளிப்பதிவு செய்ய, எஸ்எஸ் தமன் இசையமைக்கிறார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் அதிக தயாரிப்பு மதிப்புகள் மற்றும் உயர்தர தொழில்நுட்ப தரங்களுடன் மிகப்பெரிய பட்ஜெட்டில் ஸ்ரீனிவாசா சித்தூரி இப்படத்தை பெருமையுடன் தயாரித்துள்ளார். இதை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் பவன் குமார் வழங்குகிறார்கள். படத்தொகுப்பை தம்மு ராஜு கையாண்டுள்ளார்.

ராம் பொதினேனி ஜோடியாக இந்த படத்தில் ஸ்ரீ லீலா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

திருமணம் செய்யாமல் 2 ஆவது குழந்தையை வரவேற்கும் பாலிவுட் நடிகர்… ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!

பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்துவரும் அர்ஜுன் ராம்பால் தனது காதலி மூலம் 2 ஆவது குழந்தையை வரவேற்க இருக்கிறார்.

தேஜாவு இயக்குனரின் அடுத்த திரைப்படம்: டைட்டிலுடன் வெளியான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்..!

ழென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் 'தருணம்' திரைப்படம் இன்று படக்குழுவினர்

திருப்பதி கோவிலில் நடிகைக்கு முத்தமிட்ட இயக்குனர்.. வீடியோ வைரல்..!

பிரபல நடிகையை இயக்குனர் ஒருவர் திருப்பதி கோவிலில் முத்தமிட்ட வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மாதவன், தனுஷ் பட நடிகை கர்ப்பம்.. இன்ஸ்டாவில் அறிவிப்பு..!

 மாதவன், தனுஷ் உள்பட பல பிரபலங்களுடன் நடித்த நடிகை கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஜெயம் ரவி - நயன்தாராவின் 'இறைவன்' ரிலீஸ் தேதி இதுதான்: படக்குழு அறிவிப்பு..!

ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் அகமது இயக்கத்தில் உருவாகிய 'இறைவன்' என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இன்று இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்