கொரோனா தடுப்பு நிதி: ராமோஜிராவ் பிலிம்சிட்டி சேர்மன் கொடுத்த மிகப்பெரிய தொகை
- IndiaGlitz, [Wednesday,April 01 2020]
இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்க மத்திய மாநில அரசுகள் அதீத முயற்சியுடன் போராடி வருகின்றன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கொரோனா வைரஸுக்கு எதிரான போருக்கு கைகொடுக்கும் வகையில் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்பட பலர் கோடிகளிலும், லட்சங்களிலும் நிதியுதவி அளித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியின் சேர்மன் ராமோஜிராவ் அவர்கள் கொரோனா தடுப்பு நிதியாக ரூ.20 கோடி அளித்துள்ளார். இதில் 10 கோடி ஆந்திர மாநில முதல்வர் நிவாரண நிதிக்கும், ரூ.10 கோடி தெலுங்கானா மாநில முதல்வர் நிவாரண நிதிக்கும் அவர் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே தெலுங்கு நடிகர்களான பிரபாஸ் 4 கோடி ரூபாயும், பவன் கல்யாண் ரூ.2 கோடி ரூபாயும், அல்லு அர்ஜுன் 1.25 கோடி ரூபாயும், மகேஷ்பாபு ஒரு கோடி ரூபாயும், சிரஞ்சீவி ஒரு கோடி ரூபாயும், ஜூனியர் என்டிஆர் 75 லட்சம் ரூபாயும் கொடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது