இந்தியாவின் முதல் குடிமகன் ஆகிறார் ராம்நாத் கோவிந்த்! பதவியேற்பு எப்போது?
- IndiaGlitz, [Thursday,July 20 2017]
இந்தியாவின் 14வது ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் கடந்த திங்கள் அன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் அனைத்து மாநிலங்களின் எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், ராஜ்யசபா எம்பிக்கள் வாக்களித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. முதல் சுற்றில் இருந்தே பாஜக ஆதரவு வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் முன்னிலை வகித்து வந்தார். இந்த நிலையில் ராம்நாத் கோவிந்த் 7,02,044 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாம் இடம் பெற்ர மீரா குமார் அவர்களுக்கு 3,67,314 வாக்குகள் கிடைத்தது. மொத்தம் 65.65% வாக்குகள் பெற்ற ராம்நாத் கோவிந்த் அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த், வரும் 24-ம் தேதி பதவியேற்கவுள்ளார். வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, புதுவை முதல்வர் நாராயணசாமி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த தேர்தலில் 77 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.