வாட்ஸ் அப் உதவியால் 6 மாவட்டங்களை 4 மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ்:
- IndiaGlitz, [Tuesday,September 03 2019]
ராநாதபுரத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் அவருக்கு புற்று நோய் தாக்கத்தால் முதுகுத்தண்டும் செயல் இழந்துவிட்டதால் எட்டு மணி நேரத்தில் புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறினர் இதனை அடுத்து அந்த சிறுவனின் உறவினர்கள் தமுமுக என்ற அமைப்பிடம் மூலம் உதவி கேட்டனர் உடனடியாக தமுமுகவினர் ராமநாதபுரத்திலிருந்து ஆம்புலன்ஸ் புதுவை செல்வதற்கான ஏற்பாடுகளை வாட்ஸ்அப் மூலம் செய்தனர்
ராம்நாட்-புதுவை இடையில் உள்ள அனைத்து ஊர்களிலும் உள்ள தமுமுக அமைப்பினருக்கு தகவல்கல் வாட்ஸ் அப் மூலம் பறந்தது. அந்தந்த பகுதியில் உள்ள மாவட்ட நிர்வாகிகள் அங்குள்ள உள்ளூர் காவல் துறையினரும் உதவியோடு போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினார். மேலும் ஆம்புலன்ஸ் செல்லும் பகுதியில் உள்ள இளைஞர்கள் களத்தில் இறங்கி ஆங்காங்கு சாலைகளில் உள்ள போக்குவரத்தை ஒழுங்குபடுத்த்தினர்.
மேலும் ஆம்புலன்ஸ் எந்த பகுதியை கடக்கின்றது என்ற விவரத்தையும் ஒரு சில நிமிடங்களுக்கு ஒரு முறை வாட்ஸ்அப் உதவியால் பகிர்ந்து கொண்டதால் ஆம்புலன்ஸ் எந்தவித தங்கு தடையும் இன்றி செல்ல உதவியது.
ராமநாதபுரத்தில் இருந்து கிளம்பிய இந்த ஆம்புலன்ஸ் ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூ,ர் நாகை, காரைக்கால் , கடலூர் ஆகிய 6 மாவட்டங்களை சுமார் 350 கிலோ மீட்டர் தூரத்தை 4.15 மணி நேரத்தில் கடந்து ஜிப்மர் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது. இதனையடுத்து உடனே அங்குள்ள மருத்துவர்கள் அந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க தொடங்கியதால் தற்போது அந்த சிறுவன் நலமாக இருப்பதாக தகவல்
350 கிலோ மீட்டர் சிட்டு போல பறந்த ஆம்புலன்ஸ் - தமுமுகவின் தரமான ப்ளான்... | #Cancer #TMMK pic.twitter.com/sKboAxXZaC
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) September 3, 2019