கமல்ஹாசனின் அரசியலுக்கு ஆதரவு தரும் மன்னர் பரம்பரையினர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அப்துல்கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளதாகவும், அன்றைய தினமே தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அப்துல்கலாம் பிறந்த மண்ணில் இருந்து கமல் தொடங்கும் அரசியல் பயணத்திற்கு ஆதரவு அதிகரித்து கொண்டே வருகிறது
இந்த நிலையில் இராமநாதபுரம் மன்னர் பரம்பரையினர் கமல்ஹாசனின் அரசியல் முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ராமநாதபுரம் மன்னர் செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தபோது, 'கமல்ஹாசன் அவர்கள் எங்கள் அரண்மனையில் தான் பிறந்தார். இங்குதான் வளர்ந்தார். இன்று பெரிய அளவில் நடிகராக இருக்கும் அவர், அரசியலில் நுழைய உள்ளார். அவர் அரசியலிலும் பெரிய லெவலில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள். மேலும் கமல்ஹாசனின் தந்தை, எங்கள் தாத்தா சண்முகராஜேஸ்வரர் சேதுபதியின் நெருங்கிய நண்பர். எங்கள் அரண்மனையின் வழக்கறிஞராகவும் அவர் இருந்தவர்' என்று கூறினார்.
மேலும் கமல்ஹாசன் குறித்து மகாராணி லட்சுமி கூறியபோது, 'கமல்ஹாசனின் உதவியாளர் நேற்று எங்கள் அரண்மனைக்கு வந்திருந்தார். அரண்மனைக்கு வந்து ராஜாவை பார்க்க அனுமதி கேட்டார். இந்த அரண்மனையில் பிறந்த கமல்ஹாசன், 40 வருடங்கள் கழித்து மீண்டும் வருகிறார். அவருக்கு எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்' என்று கூறினார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout