கிரேட் காளியுடன் ராம்கோபால் வர்மா: அடுத்த படத்தின் ஹீரோவா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல மல்யுத்த வீரர் கிரேட் காளியுடன் எடுத்த புகைப்படத்தை இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அவர் தான் ராம்கோபால் வர்மாவின் அடுத்த பட ஹீரோவா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கிய ’டேஞ்சரஸ்’ என்ற திரைப்படம் வரும் 8ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படம் தமிழில் ’காதல் காதல்தான்’ என்ற டைட்டிலில் ரிலீசாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷனுக்காக இயக்குனர் ராம் கோபால் வர்மா மற்றும் நாயகிகள் அப்சரா, நைனா கங்குலி ஆகியோர் சென்னை வந்திருந்தார்கள் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ஏற்கனவே பெங்களூர், ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் இந்த படத்தின் பிரமோஷன் பணியை முடித்த ராம்கோபால் வர்மா தற்போது டெல்லியில் புரமோஷன் செய்துவருகிறார். டெல்லியில் அவர் கிரேட் காளியுடன் எடுத்த புகைப்படத்தையும் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கிரேட் காளி தான், ராம்கோபால் வர்மாவின் அடுத்த பட ஹீரோவா? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். இந்த கேள்விக்கு விரைவில் ராம்கோபால் வர்மா பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Giddu Ram , Giant Khali and DANGEROUS @_apsara_rani while doing promotional activities in Delhi pic.twitter.com/hCMdLKnkHf
— Ram Gopal Varma (@RGVzoomin) March 31, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com