நான் என்ன செத்தா போயிட்டேன்?  தன்னை புகழ்ந்த எம்.எம்.கீரவாணிக்கு பதில் கொடுத்த பிரபல இயக்குனர்..!

  • IndiaGlitz, [Sunday,March 26 2023]

எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ’நாட்டு நாட்டு’ என்ற பாடல் சமீபத்தில் ஆஸ்கார் விருது பெற்ற நிலையில் அவர் தனது முதல் ஆஸ்கார் விருது என பிரபல இயக்குனர் ஒருவரின் பெயரை கூற அந்த இயக்குனர் ’நான் என்ன செத்தா போய்விட்டேன்’ என்று பதில் அளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சமீபத்தில் ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போதா அவர் ‘இயக்குனர் ராம்கோபால் வர்மா தான் எனது முதல் ஆஸ்கர் விருது என்று தெரிவித்தார். எனது ஆடியோ கேசட்டுகளை ஒருசிலர் குப்பைத் தொட்டிகள் வீசிய காலம் உண்டு, ஆனால் என்னை நம்பி மீண்டும் எனக்கு வாய்ப்பு கொடுத்தவர் ராம் கோபால் வர்மாதான். அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. ராம்கோபால் வர்மாவே இந்த இசையமைப்பாளர் உடன் சேர்ந்து பணிபுரிகின்றார் என்றால் அவரிடம் ஏதோ இருக்கிறது என்று நினைத்து மற்ற இயக்குனர்கள் எனக்கு வாய்ப்பு கொடுத்தனர்.

எனவே ராம்கோபால் வர்மா தான் எனது முதல் ஆஸ்கர், இப்போது நான் வாங்கி உள்ளது இரண்டாவது ஆஸ்கர்’ என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த ராமகோபால் வர்மா, ‘பொதுவாக இறந்தவர்களை தான் இப்படி புகழ்வார்கள், நான் இந்த புகழ்ச்சியை பார்த்தவுடன் இறந்துவிட்டதாக உணர்கிறேன்’ என்று தெரிவித்தார். அவரது இந்த டுவிட் வைரலாகி வருகிறது.