திரையில் பார்த்ததை விட சிறந்தவர்.. தமிழ் மாஸ் நடிகரை சந்தித்த ராம் கோபால் வர்மாவின் ட்விட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா நேற்று சென்னை வந்திருந்த நிலையில் அவர் மாஸ் தமிழ் நடிகரை அவரது அலுவலகத்தில் சந்தித்த புகைப்படத்தை பதிவு செய்து நேரில் பார்த்ததைவிட மிகச் சிறந்தவராக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்..
பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா, சூர்யா நடித்த ‘ரக்த சரித்ரா’ என்ற திரைப்படத்தையும் இயக்கி உள்ளார் என்பதும் சில பாலிவுட் படங்களையும் இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக அவர் கிளாமர் திரைப்படங்களை மட்டுமே எடுத்து வரும் நிலையில் நேற்று அவர் சென்னைக்கு வந்தார்.
சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் சந்தித்த புகைப்படங்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் சந்தித்த புகைப்படத்தையும் அவர் பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதியை அவருடைய அலுவலகத்தில் ராமகோபால் வர்மா சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள ராம் கோபால் வர்மா ’திரையில் பார்ப்பதை விட ரொம்பவே விஜய் சேதுபதி அழகாக உள்ளார், மிகவும் சிறந்தவராக உள்ளார்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவை அடுத்து விஜய் சேதுபதி மற்றும் ராம்கோபால் வர்மா இருவரும் ஒரு திரைப்படத்தில் இணைய போகிறார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒரு திரைப்படத்தில் இணைந்தால் அந்த படம் மாஸ் படமாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
After seeing him many times on SCREEN, I finally met the REAL @VijaySethuOffl to realise that he is even BETTER in REAL than on SCREEN pic.twitter.com/NW3KOktnlr
— Ram Gopal Varma (@RGVzoomin) May 21, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com