close
Choose your channels

4 மொழிகளில் வெளியாகும் ராம்கோபால் வர்மாவின் 'சாதீய காதல் கதை'

Monday, October 8, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான சாதிய காதல் கதை படமான 'பரியேறும் பெருமாள்' திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தென்னிந்திய திரையுலகம் மட்டுமின்றி பாலிவுட்டிலும் புகழ் பெற்ற இயக்குனர் ராம்கோபால் வர்மா தற்போது 'பைரவா கீதா' என்ற சாதீய காதல் கதை கொண்ட படத்தை தமிழ் உள்பட 4 மொழிகளில் தயாரித்துள்ளார்.

தனஞ்ஜெயா என்ற நாயகனும், ஈரா என்ற நாயகியும் அறிமுகமாகும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் தாதூலு என்பவர் இயக்கியிருக்கிறார். ஆக்சன் கலந்த அழுத்தமான காதல் கதையாக தயாராகியிருக்கும் ‘பைரவா கீதா ’ இந்தியில் மட்டுமில்லாமல் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாகவிருக்கிறது.

இப்படத்தின் பாடல்களையும்,ஃபர்ஸ்ட் லுக்கையும் பார்த்த பிரபல தயாரிப்பாளர்கள் அபிஷேக் நாமா மற்றும் பாஸ்கர் ராஷி ஆகியோர் தங்களின் அபிசேக் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் இதனை வெளியிடுகிறார்கள். ஸிராஸ்ரீ எழுதிய பாடல்களுக்கு ரவிசங்கர் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டீஸர், டிரைலர் மற்றும் பாடல்கள் ஆகியவை வெளியாகி இணையத்தில் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ராம் கோபால் வர்மா தயாரிப்பில், புதுமுகங்கள் தனஞ்ஜெயா, ஈரா ஆகியோர் நடித்திருக்கும் ‘பைரவா கீதா ’அக்டோபர் 26 ஆம் தேதியன்று வெளியாகும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment