யார் இந்த பெண்.. தேடி கண்டுபிடித்து பிறந்த நாள் வாழ்த்து கூறிய இயக்குனர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமூக வலைதளத்தில் வைரலான ஒரு பெண்ணின் வீடியோவை பிரபல இயக்குனர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து யார் இந்த பெண்? என்று கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
தெலுங்கு திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ராம்கோபால் வர்மா. இவர் தனது சமூக வலைதளத்தில் பெண் ஒருவரின் வீடியோவை பதிவு செய்து, இந்த பெண் யார் என்று தெரிந்தால் தெரியப்படுத்தவும் என்று கூறியிருந்தார்.
இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்றதோடு ஆயிரக்கணக்கான கமெண்ட்களையும் பெற்றிருந்தது. இந்த நிலையில் ராம் கோபால் வர்மாவின் பதிவில் அந்த பெண்ணின் பெயர் ஸ்ரீலட்சுமி என்று நெட்டிசன்கள் தெரிவித்து, அவரது இன்ஸ்டா பக்கத்தையும் தெரிவித்தனர்.
இதனை அடுத்து ராம்கோபால் வர்மா, ‘ஸ்ரீ லட்சுமி, உங்களுக்கு இன்று பிறந்தநாள் என்று கேள்விப்பட்டேன், வாழ்த்துக்கள்.. உங்களுக்கு விருப்பமாக இருந்தால், ஆர்வம் இருந்தால் எனக்கு மெசேஜ் அனுப்பவும் என்று தெரிவித்திருந்தார்.
அனேகமாக ராம்கோபால் வர்மாவின் அடுத்த திரைப்படத்தில் இந்த பெண் நாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், ஸ்ரீ லட்சுமி என்ற அந்த பெண்ணுக்கு நெட்டிசன்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Incidentally Agosh prasad is the cinematographer who shot this video https://t.co/3jXCxXQOVh https://t.co/OaeXP9THoj
— Ram Gopal Varma (@RGVzoomin) September 29, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com