அமெரிக்க அதிபர் மீது சத்தியம், நான் அவனல்ல: இயக்குனர் ராம்கோபால்வர்மா டுவிட்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகை ஒருவருடன் இயக்குநர் ராம் கோபால் வர்மா நடனமாடுவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் நான் அவனல்ல என்று ராம்கோபால் வர்மா கூறியுள்ளார்.
தமிழ் தெலுங்கு பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ராம்கோபால் வர்மா. இவர் நடிகை இனயா சுல்தான் என்பவருடன் நடனமாடுவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலர் ராம்கோபால் வர்மாவை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில் ராம்கோபால் வர்மா இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். நான் மீண்டும் மீண்டும் இதை உறுதியாகச் சொல்கிறேன், இந்த வீடியோவில் இருப்பது நானல்ல. அதேபோல் இந்த வீடியோவில் நடனமாடும் பெண்ணும் நடிகை இனயா சுல்தான் அல்ல. இதை நான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீது சத்தியம் செய்து சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதன் பின்னர் இன்னொரு டுவிட்டில் சமூக வலைதளங்களில் இருக்கும் பெரும்பாலானோர் முட்டாள்கள் என்று தெரிவித்துள்ளார். இந்த இரண்டு டுவிட்டுகளையும் நடிகை இனயா சுல்தானா ரீட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
I once again want to clarify that the guy in this video is not me and the Girl in Red is not @inaya_sultana and I swear this on American President JOE BIDEN pic.twitter.com/K8nNera7Rc
— Ram Gopal Varma (@RGVzoomin) August 22, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com