'கிளைமாக்ஸ்' படத்தை பார்க்க கட்டணம் எவ்வளவு? ராம்கோபால் வர்மா அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்க நடிகை மியா மல்கோவா நடிப்பில் இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கிய ’கிளைமாக்ஸ்’ திரைப்படம் ஜூன் 30-ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே ராம்கோபால் வர்மா அறிவித்திருந்தார். ஆனால் தற்போது அவர் ரிலீஸ் தேதியை மாற்றி உள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் ஜூன் 6ஆம் தேதி இரவு 9 மணி முதல் செயலியில் வெளியாகும் என்று ராம்கோபால் வர்மா அறிவித்துள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தை ஒருமுறை பார்ப்பதற்கு ரூபாய் 100 கட்டணம் என்றும் இது குறித்த மேலும் சில விபரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என்று ராம்கோபால் வர்மா தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் மே 30ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் என்று அறிவித்ததால் அந்த தேதியில் ரசிகர்கள் ஏமாற்ற கூடாது என்பதற்காக அதே மே 30ஆம் தேதி மாலை 5 மணிக்கு இந்த படத்தின் இரண்டாவது டிரைலரை வெளியிட உள்ளதாக ராம்கோபால் வர்மா அறிவித்துள்ளார்.
ஏற்கனவே 'கிளைமாக்ஸ்’ படத்தின் டீசர் மற்றும் டிரைலரில் அதிகபட்ச கவர்ச்சியை காட்டிய மியா மால்கோவா, இந்த இரண்டாவது டிரைலரில் என்ன செய்ய காத்திருக்கின்றார் என்பதை நாளை மாலை 5 மணி வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
BREAKING NEWS @MiaMalkova ‘s full film CLIMAX releasing June 6 th 9 pm on app of https://t.co/FD65qcsZgc on a pay per view model ..price to watch will be Rs 100 per view .Log in Details will be given soon.. Trailer 2 will release tmrw 30th May 5 Pm GET READY to #CLIMAX pic.twitter.com/3iT4r19nKs
— Ram Gopal Varma (@RGVzoomin) May 29, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com