எடை குறைந்த ராமேஸ்வரம் கோயில் நகைகள்: 40 ஆண்டுகளுக்கு பின் சோதனையில் கண்டுபிடிப்பு

  • IndiaGlitz, [Tuesday,November 03 2020]

ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவிலில் ஆபரண நகைகள் எடை குறைந்தது தொடர்பாக 30 குருக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமேஸ்வரம் கோவிலில் உள்ள அம்மனுக்கு ஒவ்வொரு வருடமும் திருவிழாக்களின் போது நகைகள் அணிவிக்கப்படும் என்றும் அதன்பின அந்த நகைகள் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்படுவதும் வழக்கம்

இந்த நிலையில் ராமேஸ்வரம் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு நகை மதிப்பீட்டாளர்கள் மூலம் நகைகள் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் அம்மனின் ஆபரணங்கள் எடை குறைந்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து விளக்கம் கேட்டு 30 குருக்களுக்கு கோவில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது

எடை குறைப்பு நிரூபிக்கப்பட்டால் 5,000 முதல் 10 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது