பிரபல நகைச்சுவை நடிகர் ரமேஷ்திலக் திருமணம்

  • IndiaGlitz, [Sunday,March 04 2018]

நேரம், வாயை மூடி பேசவும், சூது கவ்வும், டிமாண்டி காலனி, காக்கா முட்டை, வேதாளம் உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவர் ரமேஷ் திலக். விஜய்சேதுபதி தயாரித்த ஆரஞ்சுமிட்டாய் படத்தில் முக்கிய வேடத்திலும் இவர் நடித்திருந்தார்

இந்த நிலையில் ரமேஷ் திலக், இன்று நவலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மணமகள் நவலட்சுமி ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஆர்ஜேவாக பணிபுரிபவர் என்பதும் இவர் தொகுத்து வழங்கும் மகளிர் மட்டும், கிசுகிசு கீதா போன்ற நிகழ்ச்சிகள் வெகுபிரபலம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று இல்வாழ்க்கையை தொடங்கபோகும் ரமேஷ் திலக்-நவலட்சுமி தம்பதிக்கு கோலிவுட் திரையுலகினர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு IndiaGlitz தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.