மகனின் புகைப்படத்தோடு மாஸ் பெயரையும் அறிவித்த ரமேஷ் திலக்!

  • IndiaGlitz, [Tuesday,June 01 2021]

தமிழ் திரையுலகில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் ரமேஷ் திலக் என்பது தெரிந்ததே. விஜய் சேதுபதியின் ’சூது கவ்வும்’ என்ற திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்ற ரமேஷ் திலக், அதன்பிறகு ’நேரம்’ ’வாயை மூடி பேசவும்’ ’காக்கா முட்டை’ ’வேதாளம்’ ’கபாலி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். விஜய் சேதுபதியின் ’ஆரஞ்சு மிட்டாய்’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரமேஷ் திலக் கடந்த 2018ஆம் ஆண்டு ரேடியோ ஆர்ஜே நவலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் ரமேஷ் திலக் தனது டுவிட்டர் பக்கத்தில் குழந்தை மற்றும் மனைவியின் புகைப்படத்தை பதிவு செய்து தனது குழந்தைக்கு ’மாயன் ராணா’ என்ற பெயர் வைத்திருப்பதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து ரமேஷின் குழந்தைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருவதோடு, இந்த மாஸ் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.