நீ ஆரிகிட்ட மன்னிப்பு கேட்டிருக்க கூடாது: பாலாவை ஏத்திவிட்ட ரமேஷின் குறும்படம்!

நீ ஆரியிடம் மன்னிப்பு கேட்டிருக்க கூடாது என்றும் அவ்வாறு மன்னிப்பு கேட்டதால் நீ தவறு செய்வதை நீயே ஒப்புக் கொள்வது போல் இருக்கிறது என்றும் சிறப்பு விருந்தினராக வந்த ரமேஷ் பாலாவிடம் ஏற்றிவிட்ட குறும்படத்தை நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்கள்.

ஆரி பாலாஜி ஆகிய இருவர் சண்டை குறித்து கேபி, ரமேஷ் மற்றும் பாலாஜி ஆகிய மூவரும் டிஸ்கஸ் செய்து கொண்டிருக்கும் போது ’நான் இந்த வாரத்தை மட்டும் பேசுங்கள் என்று கூறியபோது அவர் கூறிய ஒரு வார்த்தை காரணமாகத்தான் நான் கோபப்பட்டு விட்டேன் என்று பாலாஜி கூறினார்.

அதற்கு பதில் கூறிய ரமேஷ் ’ஆரி லேசாக சொரிந்துவிட்டு எதிராளியை கோபப்பட வைத்துவிடுவார் என்றும், அதேபோல் நீ உடனே கோபப்பட்டுவிட்டாய் என்றும் கூறினார். மேலும் நீ கோபப்பட்டால் கோபப்பட்ட மாதிரியே இருந்திருக்க வேண்டும் என்றும் நீ திடீரென வந்து சாரி கேட்டதால் உன் மேல் தப்பு இருப்பதை நீயே ஒப்புக்கொண்டு இருப்பதாக தெரிகிறது என்றும் ரமேஷ் கூறினார்.

அதற்கு பதில் கூறிய பாலாஜி ’நான் சாரி கேட்டதால் ஆரியின் கருத்தை ஏற்றுக் கொண்டதாக அர்த்தம் அல்ல என்றும் அவருடைய வயதுக்கு மரியாதை கொடுத்துதான் நான் சாரி கேட்டேன் என்றும் இதனை நான் கமல் சாரிடம் கூறி இருக்கிறேன் என்றும் பாலாஜி கூறுகிறார்.

கடந்த சில நாட்களாக தான் ஆரியும் பாலாஜியும் நெருக்கமான நட்புறவில் இருப்பதுபோல் தெரிந்து இருக்கும் நிலையில் ரமேஷ் பாலாஜியை ஏற்றி விட்டதால் மீண்டும் இருவருக்கும் சண்டை ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.