ஒரே நேரத்தில் 4 திரைப்படங்கள் தயாரிக்கும் தயாரிப்பாளர்
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகில் ஒரு படத்தை தயாரித்து அந்த படத்தை பிரச்சனையில்லாமல் ரிலீஸ் செய்வதே பெரும் சவாலாக இருந்து வரும் நிலையில் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் P பிள்ளை என்ற தயாரிப்பாளர் ஒரே நேரத்தில் 4 திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.
முதல் படம்: பிரபல இயக்குனர் சசி இயக்கத்தில் மிகுந்த பொருட்செலவில் சித்தார்த் - ஜீ.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகும் புதிய படம். இன்னும் பெயரிடப்படாத இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் முன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
இரண்டாவது படம்: நட்ராஜ், இஷாரா நாயர் நடிப்பில் H.வினோத் இயக்கத்தில் வெளிவந்து வசூல் சாதனை புரிந்த "சதுரங்க வேட்டை" படத்தை தெலுங்கில் "Bluff Master" என்ற தலைப்பில் தயாரிக்கின்றார். கதாநாயகனாக சத்யதேவ், கதாநாயகியாக நந்திதா நடிக்கின்றனர்.
முன்றாவது படம் - இளைஞர்களுக்கு பிடித்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படம்.
நான்காவது படம் - நடிகை டாப்ஸி நடிப்பில் தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றிப்பெற்ற "ஆனந்தோ பிரமா" படத்தை தமிழில் தயாரிக்கின்றார். இப்படத்தில் நாயகியாக நடிக்க முன்னனி கதாநாயகிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
அடுத்தடுத்து எதிர்ப்பார்ப்பை கூட்டும் விதத்தில் படங்களை வரிசைப்படுத்தி தயாரிக்கும் தயாரிப்பாளர் ரமேஷ் P பிள்ளை, தனது தயாரிப்பு நிறுவனம் அபிஷேக் பிலிம்ஸ் திரையுலகிலும், ரசிகர்களின் இதயங்களிலும் நீங்கா இடம் பிடிக்கும் என்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments