'ஆர்.ஆர்.ஆர்' வெற்றியின் நடுவே ராம்சரண் தேஜா மனைவியின் வாழ்த்து யாருக்கு தெரியுமா?

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூலை குவித்து வருகிறது என்பதும், இந்தப் படத்திற்கு ஏகப்பட்ட பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் வெற்றியை தெலுங்கு திரையுலகமே கொண்டாடி வரும் நிலையில் இந்த படத்தின் நாயகர்களில் ஒருவரான ராம் சரண் தேஜாவின் மனைவி உபசனா, ஜூனியர் என்டிஆரின் மனைவி லட்சுமி பிரனதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

நேற்று ஜூனியர் என்டிஆரின் மனைவி பிரனதி தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், ராம் சரண் தேஜாவின் மனைவி உபசனா, ’ஆர்.ஆர்.ஆர்’ வெற்றியின் நடுவே கொண்டாடப்படும் உங்களது பிறந்தநாளுக்கு எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பதிவு வைரலாகி வருகிறது.

மேலும் ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தை முதல் நாள் முதல் காட்சியை திரையரங்கில் ரசிகர்களுடன் ரசிகராக பார்த்த உபசனா அதுகுறித்த வீடியோக்களையும் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.