'விக்ரம்' அடுத்த பாகத்தில் ராம்சரண் தேஜா? என்ன கேரக்டர் தெரியுமா?

உலகநாயகன் கமலஹாசன் நடித்த 'விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் உருவாக்கப்படும் என தெரிகிறது. 'விக்ரம்’ படத்தில் சூர்யா கடைசி ஐந்து நிமிடங்களில் வந்து அடுத்த பாகத்திற்கான ஆரம்பத்தை தொடக்கி வைத்துள்ளார்.

இந்த நிலையில் 'விக்ரம்’ படத்தின் அடுத்த பாகத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அளித்த பேட்டியில் ராம்சரண் தேஜாவை சந்தித்து தான் ஒரு கதை கூறியதாகவும் விரைவில் இணைவோம் என்று லோகேஷ் கனகராஜ் கூறிய நிலையில் அந்த படம் 'விக்ரம்’ படத்தின் அடுத்த பாகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

'விக்ரம்’ படத்தில் சூர்யா, ரோலக்ஸ் என்ற கேரக்டரில் அறிமுகமான நிலையில் 'விக்ரம்’ படத்தில் கமல்ஹாசனின் பேரனாக வரும் கேரக்டரில் ராம்சரண் தேஜா நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. அப்படி என்றால் ராம்சரண் தேஜா மற்றும் சூர்யா ஆகிய கேரக்டர்கள் நேருக்கு நேர் மோதும் கேரக்டர்களா? அல்லது இந்த இரண்டு கேரக்டர்களில் எதுவும் சஸ்பென்ஸை லோகேஷ் வைத்திருக்கிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த நிலையில் தளபதி விஜய் நடிக்கும் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை முடித்துவிட்டு தான் அவர் ’கைதி 2’ படத்தை இயக்குகிறாரா? அல்லது 'விக்ரம்’ அடுத்த பாகத்தை படத்தை இயக்குகிறாரா? என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

பயில்வான் ரங்கநாதன் பின்னணியில் தனுஷ்? பாடகி சுசித்ரா போலீஸ் புகார்

நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் கடந்த சில ஆண்டுகளாக தனது யூடியூப் சேனலில் நடிகர், நடிகைகள் குறித்த அந்தரங்க விஷயங்களை கூறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகார்த்திகேயனுக்கு ஏற்ற செம டைட்டில்: 'எஸ்கே 20' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'எஸ்கே 20'  படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

விக்கி-நயன் திருமணத்திற்கு எங்களையும் கூப்பிட்டிருக்கலாம்: நெருங்கிய உறவினர் வருத்தம்

 இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா திருமணம் இன்று காலை மிகச் சிறப்பாக நடந்ததை அடுத்து பல இந்திய திரையுலக பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு

இது உண்மையிலேயே ரொம்ப மோசம்: ஆத்திரமடைந்து டுவிட் போட்ட பூஜா ஹெக்டே!

 இது உண்மையிலேயே ரொம்ப மோசம் என நடிகை பூஜா ஹெக்டே மிகவும் ஆத்திரத்துடன் தனது டுவிட்டரில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நயன் மேம் டு மனைவி: விக்னேஷ் சிவனின் நெகிழ்ச்சியான பதிவு

நயன்தாராவை முதல் முதலில் 'நானும் ரவுடிதான்' படத்திற்காக பார்த்தபோது நயன்தாரா மேம் என்று கூறிய நிலையில் தற்போது படிப்படியாக உறவு வளர்ந்து, இன்று எனது மனைவியாகி இருக்கிறார்