ராம்சரண், அக்சயகுமார், சச்சின் தெண்டுல்கருடன் செம்ம டான்ஸ் ஆடியோ சூர்யா. ஜாலி வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ராம் சரண் தேஜா, அக்சயகுமார், சச்சின் டெண்டுல்கர் ஆகியோருடன் சூர்யா டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ISPL கிரிக்கெட் போட்டிகள் இன்று ஆரம்பமாக இருக்கும் நிலையில் இன்றைய முதல் போட்டி ஸ்ரீநகர் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இந்த போட்டி தொடரின் ஆரம்ப விழாவில் தான் ராம் சரண் தேஜா, அக்சயகுமார், சச்சின் டெண்டுல்கர் ஆகியோருடன் சூர்யா டான்ஸ் ஆடியுள்ளார்.
ISPL கிரிக்கெட் போட்டி தொடரில் கலந்து கொள்ளும் அணிகளின் உரிமையாளர்கள் குறித்த தகவல் சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம். சென்னை அணியின் உரிமையாளர் சூர்யா, கொல்கத்தா அணியின் உரிமையாளர் சையப் அலிகான் மற்றும் காத்ரீகா கைஃப், ஸ்ரீநகர் அணியின் உரிமையாளர் அக்சயகுமார், பெங்களூர் அணியின் உரிமையாளர் ஹிருத்திக் ரோஷன், மும்பை அணியின் உரிமையாளர் அமிதாப் பச்சன், ஹைதராபாத் அணியின் உரிமையாளர் ராம்சரண் தேஜா என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்றுமுன் ISPL கிரிக்கெட் போட்டிகள் தொடங்க இருந்த நிலையில் அணிகளின் உரிமையாளர்களான சூர்யா, அக்சயகுமார், ராம்சரண் தேஜாவுடன் சச்சின் டெண்டுல்கர் உடன் இணைந்து கிரிக்கெட் மைதானத்தில் நடமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ‘ஆர்.ஆர்.ஆர். என்ற படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ என்ற பாடலுக்கு தான் இவர்கள் நடனம் ஆடினார் என்பதும் இந்த ஜாலி வீடியோவை ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Video of the Day🤩🔥#Suriya, #RamCharan, #AkshayKumar, #SachinTendulkar Dancing together for "Naatu Naatu" at ISPL👌🕺 pic.twitter.com/VLsw97OT9q
— AmuthaBharathi (@CinemaWithAB) March 6, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments