சமந்தாவின் அடுத்த படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்

  • IndiaGlitz, [Monday,March 26 2018]

பிரபல நடிகை சமந்தா தமிழில் சிவகார்த்திகேயனுடன் 'சீமராஜா', விஷாலுடன் 'இரும்புத்திரை', விஜய்சேதுபதியுடன் 'சூப்பர் டீலக்ஸ், சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'மகாநதி' மேலும் யூடர்ன் தமிழ் ரீமேக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில்  ராம்சரணுக்கு ஜோடியாக சமந்தா 'ரங்கஸ்தாலம்' என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார் என்பதையும், அந்த படம் வரும் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

'ரங்கஸ்தாலம்' படத்திற்கு சென்சார் அதிகாரிகள்' யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படம் 175 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 55 நிமிடங்கள் ஓடும் நீளம் அதிகமுள்ள படமாகவும் உள்ளது.

More News

30 ஹிரோக்களை சமாளிக்கும் வில்லனாக 'பாகுபலி ராணா'

மார்வலின் பிரம்மாண்ட சூப்பர் ஹீரோ படம் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்' என்ற படத்தின் டிரெய்லர் சமீபத்தில் யூடியூபில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்தது/

வர்றோம், தட்றோம், தூக்குறோம்: மற்றொரு சிஎஸ்கே வீரரின் தமிழ் டுவீட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துவிட்டாலே அனைவரும் தானாகவே தமிழர்களாக மாறி தமிழில் டுவீட் போட தொடங்கிவிடுகின்றனர்.

முதன்முதலாக விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் ஏ.ஆர்.ரஹ்மான்

தளபதி விஜய் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒரு பாடலை பாடி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவரது படத்தில் இடம்பெறும் மற்ற பாடல்களை விட விஜய் பாடும் பாடல் அவரது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

ராஜஸ்தான் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து ஸ்மித் நீக்கம்; புதிய கேப்டன் யார்?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரம் பூதாகரமாகியதால் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்தை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் நடவடிக்கை .

பாஜகவினர் இந்த விஷயத்தில் கைதேர்ந்தவர்கள்: நடிகர் பிரகாஷ்ராஜ்

'மக்களை மத, இன ரீதியாக பிரித்தாள்வதில் கைதேர்ந்த பாஜகவினர், அந்த பழியை ஏன் அடுத்தவர்கள் மீது போடுகிறீர்கள். மக்களை மத, இன ரீதியாக பிரித்தாள்வது உங்களுக்கே கசந்துவிட்டதா?