நீதிமன்றத்தில் நடிகை ரம்பா தாக்கல் செய்த புதிய மனு

  • IndiaGlitz, [Sunday,December 04 2016]

'உள்ளத்தை அள்ளித்தா' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்த நடிகை ரம்பா, கனடாவை சேர்ந்த இலங்கை தமிழர் இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்து கணவருடன் கனடாவில் செட்டில் ஆனார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. ஆனால் சமீபத்தில் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.
இந்நிலையில் கணவருடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் நடிகை ரம்பா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இந்த வழக்கை டிசம்பர் 3ஆம் தேதி தள்ளி வைத்தது.
இதன்படி நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை ரம்பாவின் சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், 'என்னுடைய கணவர் என்னுடன் தற்போது சேர்ந்து வாழவில்லை. குழந்தைகள் இருவரும் என்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் தான் உள்ளனர். அவர்கள் சென்னையில் உள்ள பள்ளிக்கூடத்தில் படிக்கின்றனர். எனவே, இந்த இரு குழந்தைகளின் சட்டப்படியான பாதுகாவலராக என்னை அறிவிக்கவேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனாலும் நேற்று ரம்பாவும் அவருடைய குழந்தைகளும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனவே இந்த வழக்கை வரும் ஜனவரி 21ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

More News

என் மகளின் படிப்புக்கு கேட்காமலே உதவியவர் அஜித். பிரபல நடிகர்

தல என்று அனைவரும் அன்போடு அழைக்கப்பட்டு வரும் அஜித், ஒரு சிறந்த நடிகர் மட்டுமின்றி சிறந்த மனிதநேயமும் உள்ளவர்...

ரூ.1.25 கோடி சம்பளத்தில் வேலை. சென்னை ஐஐடி மாணவர் புதிய சாதனை

சென்னை ஐஐடியில் நடைபெற்ற கேம்பஸ் இண்டர்வியூவில் மாணவர் ஒருவருக்கு 1.25 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது....

விஜய்யின் பைரவா: தெறியை முந்தியது, கபாலியை நெருங்கியது

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பைரவா' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக...

ஏ.டி.எம் வாசலில் குழந்தை பெற்ற நிறைமாத கர்ப்பிணி

பாரத பிரதமர் நரேந்திரமோடியின் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு காரணமாக ஒருபக்கம் மக்கள் ரூபாய்...

மீண்டும் ரகுவரனாக மாறும் தனுஷ்

தனுஷ், அமலாபால் நடிப்பில் வேல்ராஜ் இயக்கிய மிகப்பெரிய வெற்றி படம் 'வேலையில்லா பட்டதாரி'. இந்த படத்தில் தனுஷ் ரகுவரன்...