நடிகை ரம்பா விவாகரத்து வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய அறிவுரை
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகையாக இருந்த ரம்பா, கடந்த 2010ஆம் ஆண்டு கனடா தொழிலதிபர் இந்திரன் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிகள் கனடாவில் செட்டில் ஆகிய நிலையில் இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன.
இந்நிலையில் ஆறு வருடங்கள் கழித்து இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் தற்போது பிரிந்து வாழ்கின்றனர். இதனால் சமீபத்தில் நடிகை ரம்பா, தன்னால் இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக வாழ முடியவில்லை என்றும், தனது கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ரம்பா மற்றும் அவருடைய கணவர் இந்திரன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். இந்த வழக்கு குறித்து கருத்து கூறிய நீதிபதி, 'கணவன்-மனைவி இருவருக்கும் இடையே உள்ள பிரச்னையை இன்று மாலை சமரச மையத்தில் பேசித் தீர்த்து கொள்ளுமாறு ரம்பாவுக்கும், அவரது கணவருக்கும் அறிவுரை கூறினார்.
எனவே இன்று மனம் வீட்டு பேசும் ரம்பா-இந்திரன் தம்பதியினர் கருத்துவேறுபாடுகளை மறந்துவிட்டு மீண்டும் வாழ்க்கையில் ஒன்று சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout