close
Choose your channels

பட அறிவிப்பு, ஃபர்ஸ்ட்லுக், டீசர்: ராமராஜனின் 'சாமானியன்' படக்குழுவின் அடுத்தடுத்த அதிரடி!

Tuesday, September 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் மக்கள் நாயகன் ராமராஜன் மீண்டும் தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானது என்பதும் ’சாமானியன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அடுத்த நாளே வெளியானது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டீசரை வெளியிட்டு படக்குழுவினர் அசத்தியுள்ளனர்.

மக்கள் நாயகன் ராமராஜன் கடந்த 2012 ஆம் ஆண்டு ’மேதை’ என்ற திரைப்படத்தில் நடித்த பிறகு 10 ஆண்டுகளாக எந்த திரைப் படத்திலும் நடிக்கவில்லை. இதனை அடுத்து சமீபத்தில் ராமராஜன் நடிக்கும் திரைப்படம் ஒன்றின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும் இந்த படத்திற்கு ’சாமானியன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அடுத்த நாளே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர் இதனை அடுத்து தற்போது இந்த படத்தின் டீசரை வெளியிட்டு உள்ளனர்.

இந்த டீசரில் நூலகத்தில் அத்துமீறி நுழையும் ராமராஜன், ராதாரவி மற்றும் எம்எஸ் பாஸ்கர் அந்த நூலகரை பணயமாக வைத்துக் கொண்டு மிரட்டுவது அதன் பின்னர் துப்பாக்கியால் அந்த நூலகரை சுட்டுக் கொள்வதுமான காட்சிகள் உள்ளன. நூலகராக மைம்கோபி நடித்துள்ளார்.

இந்த டீசரில் உள்ள காட்சிகள் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படக்குழுவினர் செல்லும் வேகத்தை பார்த்தால் இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த படத்தை ரிலீஸ் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்திக் குமாரின் கதையில் ராஹேஷின் திரைக்கதை வசனம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சாமானியன்’ திரைப்படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார். இந்த படத்தை மதியழகன் என்பவர் தயாரித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment