ராமராஜன் படத்தில் அறிமுகமான நடிகைக்கு இவ்வளவு பெரிய மகன்களா?

  • IndiaGlitz, [Sunday,July 10 2022]

நடிகர் ராமராஜன் படத்தில் அறிமுகமாகி அதன் பின் பிரபல நடிகையாக இருந்த ஒருவரின் மகன்களின் புகைப்படம் வைரலாகி வரும் நிலையில் இந்த நடிகைக்கு இவ்ளோ பெரிய மகன்களா? என ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.

நடிகர் ராமராஜன் நடிப்பில் கங்கை அமரன் இயக்கத்தில் கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’எங்க ஊரு பாட்டுக்காரன்’. இந்த படத்தில் தான் நடிகை நிஷாந்தி தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் பிரபல நடிகையாக இருந்த பானுப்ரியாவின் சகோதரி ஆவார்.

‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டானதால் அதன்பிறகு நிஷாந்தி பல தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 1999ஆம் ஆண்டு பிரபல ஹிந்தி நடிகர் சித்தார்த் ரே என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை நிஷாந்திக்கு 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2004ஆம் ஆண்டு நிஷாந்தியின் கணவர் சித்தார்த் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

இந்த நிலையில் கடந்த 1994ஆம் ஆண்டுக்குப் பிறகு திரையுலகில் இருந்து விலகிய நிஷாந்தி சில தொலைக்காட்சி தொடர்களில் மட்டும் நடித்தார். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது நடிகை நிஷாந்தி சரோஜினி நாயுடுவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் விஷாலின் மகன்கள் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் நிஷாந்திக்கு இவ்வளவு பெரிய மகன்களா? என ரசிகர்கள் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.


 

More News

விஜய்யும் அஜித்தும் ரகசியமா துபாய்ல சந்திப்பாங்க: சொன்ன பிரபலம் யார் தெரியுமா?

விஜய், அஜித் ஆகிய இருவரும் துபாயில் குடும்பத்துடன் அவ்வப்போது சந்தித்துக் கொள்வார்கள் என்று பிரபல இசையமைப்பாளர் கூறியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

7 வருடங்களுக்கு முன் மக்கள் என் பெயரை மாற்றிவிட்டார்கள்: தமன்னா நெகிழ்ச்சி

ஏழு வருடங்களுக்கு முன் மக்கள் என் பெயரை மாற்றி விட்டார்கள் என்றும் என்னை புதிய பெயரில் அவர்கள் அழைக்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றும் நடிகை தமன்னா தனது சமூக வலைத்தளத்தில்

3டி மற்றும் டால்பி தொழில்நுட்பத்தில் ரிலீசாகும் கமல் படம்: ரசிகர்கள் ஆர்வம்

20 வருடங்களுக்கு முன் வெளியான கமல்ஹாசனின் படம் 3டி மற்றும் டால்பி தொழில்நுட்பத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ள நிலையில் இந்த தகவலை கேட்டு கமல் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

'பொன்னியின் செல்வன்' படத்துடன் மோதுகிறதா தனுஷ் படம்?

பிரமாண்ட இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அதே தேதியில் தனுஷின் அடுத்த படம்

மைனா நந்தினியை அடுத்து புதுக்கார் வாங்கிய விஜய் டிவி பிரபலம்: எத்தனை லட்சம் தெரியுமா?

விஜய் டிவியில் உள்ள பிரபலங்கள் அடுத்தடுத்து புது கார் வாங்கி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சமீபத்தில் மைனா நந்தினி புதுக்கார் வாங்கிய நிலையில்