சாதகமாக வந்த நீதிமன்ற தீர்ப்பு.. ராமராஜன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நீண்ட இடைவேளைக்கு பிறகு ராமராஜன் படம் ஒன்று உருவாக்கப்பட்ட நிலையில் இந்த படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நீதிமன்ற வழக்கு காரணமாக ரிலீஸ் தேதி தாமதமாகிய நிலையில் தற்போது நீதிமன்ற தீர்ப்பு வெளியாகி உள்ளதை அடுத்து ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் செல்வன் ராமராஜன் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடித்த ’சாமானியன்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென இந்த படத்தின் டைட்டில் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டிருந்த நிலையில் தற்போது ’சாமானியன்’ படத்தின் குழுவினர்களுக்கு ஆதரவாக நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்த நிலையில் தற்போது இந்த படம் மே 23ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமராஜனுடன் ராதாரவி, எம்எஸ் பாஸ்கர், ராஜா ராணி பாண்டியன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஆர் ராஜேஷ் என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ’மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ ’தம்பிக்கோட்டை’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு ராமராஜன் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள நிலையில் இந்த படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments